search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் சிக்கினார்"

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாயமான தாய் வாட்ஸ்-அப் தகவலால் போலீசாரிடம் சிக்கினார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பர்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் மிதுன், 7 மாதத்தில் லட்சன் என்று 2 ஆண் குழந்தைகள் இருந்தனர்.

    நேற்று முன்தினம், வழக்கம்போல் சிலம்பரசன், வேலைக்கு சென்றுவிட்டார். மிதுன் பள்ளிக்கு சென்ற பின்னர், வீட்டில் லட்சனுடன் ஜெயசித்ரா இருந்தார். இந்த நிலையில் மதியம், சிலம்பரசன் வீட்டுக்கு வந்தார். அப்போது, ஜெயசித்ரா மற்றும் லட்சன் ஆகியோரை வீட்டில் காணவில்லை. இதையடுத்து அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர், சந்தேகத்தின் பேரில் வீட்டின் குளியல் அறையின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஒரு அண்டா மூடி வைக்கப்பட்டு நிலையில் இருந்தது. அதை பார்த்து சந்தேகமடைந்த, சிலம்பரசன், அண்டாவின் மூடியை திறந்து பார்த்தார். அதன் மேல் பகுதியில் பழைய துணிகளும், அதன் கீழ் தண்ணீரும் இருந்தன. இதையடுத்து, துணிகளை நீக்கிவிட்டு அவர் பார்த்த போது, தண்ணீரில், மூழ்கிய படி லட்சன் பிணமாக கிடந்தான்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தனது குழந்தையை பார்த்து கதறி அழுதார். ஜெயசித்ராவை தேடினார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதையடுத்து சிலம்பரசனின் குடும்பத்தினர் இந்த சம்பவத்தை போலீசில் தெரிவிக்காமல், குழந்தையின் உடலை வீட்டில் வைத்திருந்த படியே ஜெயசித்ராவை தேடி வந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலம்பரசனின் வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பரந்தாமன், செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் குழந்தை லட்சனின் தாய் ஜெயசித்ரா மாயமாகி விட்டார். இவரை கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேணடும்’ என்று கூறி ஒரு செல்போன் எண்ணை குறிப்பிட்டு வாட்ஸ்-அப்பில் தகவல் வேகமாக பரவியது.

    இந்த நிலையில் மேல்மருவத்தூரில் சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிந்த ஜெயசித்ராவை வாட்ஸ்-அப்பில் பரவிய தகவல் மூலம் அந்த பகுதி பொதுமக்கள் அடையாளம் கண்டனர்.

    உடனே ஜெயசித்ராவை பிடித்து அந்த பகுதியில் உள்ள போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பண்ருட்டி போலீசார் மேல்மருவத்துருக்கு விரைந்தனர்.

    ஜெயசித்ராவை அழைத்து வந்து விசாரணை நடத்தினால்தான் குழந்தை கொலை செய்யப்பட்டு அண்டாவில் போடப்பட்டதா? என்ற விவரம் தெரியவரும்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×